பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் மேம்பால பணிகளை எம்எல்ஏ ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீர்க்கன்காரணை பகுதியில், நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் மேம்பால பணிகள், தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் பீர்க்கன்காரணை அரசினர் மேல்நிலை பள்ளியில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் கட்டிடம் மற்றும் கழிப்பிடம், பெருங்களத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கண்ணன் அவென்யூ பிரதான சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படு வரும் கால்வாய் பணிகளை நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மேம்பால பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் பழுதடைந்த சாலைகள், மெட்ரோ வாட்டர் குழாய்கள் உடைப்பு, மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஆகிய பொதுமக்களின் புகார்கள் அடிப்படையில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

Related Stories:

More
>