தமிழகத்தில் இன்று 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 1,407 பேர் குணம், 16 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை.!

சென்னை: தமிழகத்தில் இன்று 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,24,849 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே கடந்த 24 மணி நேரத்தில் 1,407 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து, தற்போதைக்கு கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 14,326 என்றாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,39,209 என்றாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மேலும் 156 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் மேலும் 16 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 11 பேர் அரசு மருத்துவமனையையும், 5 பேர் தனியார் மருத்துவமனையையும் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,928 என்றாகியுள்ளது.

Related Stories:

More
>