×

ஐஆர்ஓஏஎப் கழகத்தை தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை மூடுகிறது ரயில்வே துறை

டெல்லி : ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தை (ஐஆர்எஸ்டிசி) நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி ரயில்வே துறையில் ரயில்களை மாற்று எரிபொருளில் இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட கழகமான, ஐஆர்ஓஏஎப் கழகத்தை மத்திய அரசு நிரந்தரமாக மூடியது.இந்நிலையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கழகத்தையும் மத்திய ரயில்வேதுறை மூடியுள்ளது.

இதையடுத்து, இந்த ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகங்கள் இதுவரை கவனித்து வந்த திட்டங்கள் அனைத்தும் அந்தந்த மண்டல ரயில் நிலையங்களிடம் ஒப்படைக்கப்படும்.ஐஆர்எஸ்டிசி கடந்த மார்ச் 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவில் ஏறக்குறைய 90க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, நிர்வகிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஐஆர்எஸ்டிசி திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : IROAF , ஐஆர்ஓஏஎப் ,ரயில் நிலையங்கள், ரயில்வே துறை
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...