நிலக்கரி குறைவாக கையிருப்பு வைத்திருந்த அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை குறைந்தது.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நிலக்கரி தடுப்பாடு தற்போது சரிசெய்யப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 4 நாட்களுக்கு குறைவாக நிலக்கரி கையிருப்பு வைத்திருந்த அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு என்பது தற்போது இந்தியா சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் மின்சாரப் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது. பல மாநிலங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவிவருகிறது.

இந்தநிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிலக்கரி விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மின்தேவை குறைந்ததாலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகளும், நிலைமை சீராகி வருவதற்கு காரணமாக என கூறப்படுகிறது.

Related Stories:

More
>