×

தொடரும் முகூர்த்தம், கோயில் திருவிழாக்கள் பாக்குமட்டை தட்டு தேவை அதிகரிப்பால் உற்பத்தி தீவிரம்: உற்பத்தியாளர்கள் தகவல்

சேலம்: ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முகூர்த்தங்கள் இருப்பதாலும், கோயில் திருவிழாக்கள் வருவதாலும் பாக்குமட்டை தட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாக்குமட்டை உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் சேலம், திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்பட பல பகுதிகளில் பாக்கு ேதாப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் லட்சணக்கணக்கான பாக்குமரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாக்கு மரத்தில் இருந்து முதிர்ந்த பாக்கு எடுக்கப்படுகிறது. இவை பாக்கு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு நறுமணமிக்க பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் மட்டைகளை விவசாயிகள் சேகரித்து, பாக்குமட்டை தட்டு உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு பல அளவுகளில் பாக்குமட்டை தட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் பாக்குமட்டை தட்டு உற்பத்தி செய்யப்படும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டது.

இதனால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாக்குமட்டை தட்டுகள் விற்காமல் தேக்கமடைந்தது. இதன் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதாலும், நடப்பு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முகூர்த்தங்கள், கோயில் திருவிழாக்கள் வருவதால் பாக்குமட்டை தட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் மீண்டும் பாக்குமட்டை தட்டு உற்பத்தியை உற்பத்தியாளர்கள் வேகப்படுத்தியுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த பாக்குமட்டை தட்டு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை, தை மாத ங்களில் கோ யில் திருவிழாக்கள் அதிகளவில் இருக்கும். இந்த மாதங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க பாக்குமட்டை தட்டுகளை அதிகளவில் வாங்குவார்கள். இதைதவிர முகூர்த்த நாட்களிலும் பாக்குமட்டை தட்டு விற்பனை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் பாக்குமட்டை தட்டு உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்த தொழிற்கூடங்களில் 6 இஞ்ச் முதல் 12 இஞ்ச் வரை 4 அளவுகளில் பாக்குமட்டை தட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு பாக்கு மட்டை தட்டு  ஒரு ரூபாய் முதல் ₹4 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொ ரோனா 2வது அலை பரவியது. இதன் காரணமாக கோயில் திருவிழாக்கள், ஆடம்பர முகூர்த்தங்கள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக லட்சக்கணக்கில் பாக்குமட்டை தட்டுகள் தேக்கமடைந்தது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இத்தொழிலில் ஈடுபட்ட பல்லாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் கோயில்கள் திறக்கப்பட்டது. அதில் வாரத்தில் மூன்று நாட்கள் மூடப்பட்டது. அதே நேரத்தில் கடந்த புரட்டாசி மாதம் முகூர்த்தம், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் பாக்குமட்டை தட்டு  விற்பனை இல்லாமல் போனது. நடப்பு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் வருகிறது. மேலும் கடந்த வாரம் முதல் வாரத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாக்குமட்டை தட்டுகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம். அவ்வப்போது உற்பத்தி செய்யப்படும் பாக்குமட்டை தட்டுகளை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

ஆட்கள் இல்லாமல் 50% உற்பத்தி பாதிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் பாக்கு மட்டை ெதாழிற்கூடங்கள் மூடப்பட்டது. இத்தொழிலில் ஈடுப்பட்ட பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது பாக்குமட்டை தட்டுகளின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் மாற்றுத்தொழிலுக்கு சென்று தொழிலாளர்கள் மீண்டும் இத்தொழிலுக்கு திரும்பவில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாக்குமட்டை தட்டு  உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக பல தொழிற்கூடங்களில் 50 சதவீதம் மட்டுமே பாக்குமட்டை தட்டுகள் உற்பத்தி நடக்கிறது என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


Tags : Mukurtha ,Temple , Continuing mukurttam, temple festivals require pakkumattai plate Increased production intensity: Manufacturers information
× RELATED வார விடுமுறையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!