×

அமெரிக்காவில் நீரவ் மோடி மீது உள்ள மோசடி வழக்குகளை ரத்து செய்ய தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது நியூயார்க் நீதிமன்றம்

வாஷிங்க்டன்: அமெரிக்காவில் தன் மீது உள்ள மோசடி வழக்குகளை ரத்து செய்ய கோரிய நீரவ் மோடி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவில் பல கோடி மோசடி செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமெரிக்காவில் மோசடி வழக்குகள் உள்ளது.

அதாவது, அமெரிக்காவில் Firestat Diamond, Fantasy Inc மற்றும் A Jeffe  ஆகிய நிறுவனங்களை நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகளான மிஹிர் பன்சாலி, அஜய் காந்தி ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்களை நீரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு நியூயார்க்கில் உள்ள வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஒருவரை நீதிமன்றம் நியமித்தது. அவர் தாக்கல் செய்த அறிக்கையில் குறைந்தது 15 மில்லியன் டாலர்களை நீரவ் மோடியும் கூட்டாளிகளும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

அதனால் அந்த அறிக்கையையும், வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீரவ் மோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீன் எச் லேன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : New York ,United States ,Neerav Modi , New York court dismisses petition to drop fraud charges against Neerav Modi in US
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்