×

இந்தியாவின் தேசிய மொழி இந்தியை அனைவரும் தெரிந்து வைத்து இருப்பது அவசியம் : சோமாட்டோவின் கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்!!

டெல்லி :இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும் அதனை அனைவரும் தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்றும் உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையம் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. சோமாட்டோவில் ஆர்டர் செய்த உணவு வராததால் விகாஷ் என்ற இளைஞர் அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி உள்ளார். அப்போது மொழி பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்க முடியவில்லை என்று சோமாட்டோ தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் சோமாட்டோ செயல்படும் பட்சத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என்று விகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாட்டோ நிறுவனமோ இந்தி நமது தேசிய மொழி என்றும் அனைவரும் குறைந்தபட்சம் அதனை தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்றும் பதில் அளித்துள்ளது. இந்த கலந்துரையாடலை விகாஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை எதிர்த்து சோமாட்டோ நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. ட்விட்டரில்  #Reject_Zomato, #ZomatoSpeakTamil உட்பட பல ஹாஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் சோமாட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்தி தேசிய மொழி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்கள் மூலம் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.   


Tags : India , இந்தியா, தேசிய மொழி, இந்தி
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...