புதிய உச்சம் தொட்டது மும்பை பங்கு சந்தை!: சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை கடந்து சாதனை..!!

மும்பை: மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை எட்டிய புதிய உச்சத்தை பதிவு செய்திருக்கிறது. இந்திய பங்கு சந்தைகளில் தொடர்ச்சியாக 8வது நாளாக பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே தொடங்கின. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்கத்தில் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127 புள்ளிகள் அதிகரித்து 18,604 புள்ளிகளாக காணப்பட்டது. பின்னர் வர்த்தகம் தொடங்கி 1 மணி நேரத்தில் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சற்று குறைய தொடங்கின.

இன்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வேகமாக மீண்டு வருவதையே பங்கு சந்தைகளின் எழுச்சி உறுதி படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்டாலும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>