அறிவித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தவில்லை!: முற்றிலுமாக முடங்கிப்போன புதுச்சேரி அரசு...முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கி இருப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், பெட்ரோல் விலை இன்னும் 6 மாதங்களில் 150 ரூபாயாகவும், சமையல் எரிவாயு விலை 1,250 ரூபாயாக உயரும் என்று கூறினார். முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல முடிவுகள், திட்டங்களை அறிவித்தார். ஆனால் தற்போது ஒன்று கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறினார். மேலும், சட்டப்பேரவை முடிந்து சுமார் 2 மாதங்கள் ஆகியும், எந்த கோப்பும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை என்றும் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் அறிவிப்போடு நிற்கின்றன என்றும் நாராயணசாமி சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 150 ரூபாயை தாண்டுகின்ற நிலையை மோடி உருவாக்குவார். அதேபோல டீசல் ஒரு லிட்டர் 140 ரூபாய் என்ற நிலை உருவாகும். சமையல் எரிவாயானது தற்போது 950 ரூபாயாக உள்ள சிலிண்டர் விலை 1,250 ரூபாயாக உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சாதாரண, நடுத்தர மக்கள் அனைவரும் நடுத்தெருவில் நிற்கவேண்டிய சூழலை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்குவார் என்று நாராயணசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: