ராமநாதபுரத்தில் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு இளைஞரை பார்க்க வந்த பெண் மருத்துவமனையில் தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு இளைஞரை பார்க்க வந்த பெண் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பேஸ்புக் மூலம் அறிமுகமான விஜய் என்ற இளைஞரை ஐஸ்வர்யா என்றம் இளம்பெண் சந்திக்க வந்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் இளைஞர் விஜய் அதிர்ச்சியடைந்தார். ஐஸ்வர்யாவை ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் விஜய் ஒப்படைத்து கணவருக்கு தகவல் அளித்துள்ளார். மனைவியை காணாமல் புகாரளித்த கணவர் ரங்கன் தூத்துக்குடியிலிருந்து வருவதற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ஆலோசனை மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

More