அரக்கோணம் அருகே மர்ம நோயால் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிப்பு!: கிராமங்களுக்கு நேரில் சென்று மருத்துவ குழு சிகிச்சை..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மர்ம நோயால் மாடுகள் பாதிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து கிராமங்களுக்கு நேரில் சென்ற கால்நடை மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தி உரிய சிகிச்சை அளித்தனர். அரக்கோணம் அடுத்த முருங்கை, கணபதிபுரம், சித்தூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் பசுமாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மர்மநோய் தாக்குதலுக்கு ஆளாகி வந்தன. கால்நடைகள் நடக்கமுடியாத அளவுக்கு பாதிப்பு அதிகரித்துவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.

இதுபற்றிய செய்தி சன் நியூஸ் செய்தியில் நேற்று ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து கால்நடை துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், 500க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகளையும் அவர்கள் வழங்கினர். இந்த செய்தியை சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டத்தமைக்காக விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

More
>