×

18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி : உத்தராகண்டின் சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி : 18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.மேலும் கோவிட் -19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் உத்தராகண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை  98,67,69,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,41,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் ட்விட்டர் தகவலுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிலில் தெரிவித்துள்ளதாவது;

“தேவ்பூமி மக்களுக்கு வாழ்த்துகள். கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உத்தராகண்டின் சாதனை மிக முக்கியமானது. உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மக்களின் உதவியோடு இத்திட்டம் வெற்றிப் பெறும். பங்களிப்பு அவசியம்” எனக் கூறியுள்ளார்.

Tags : Modi ,Uttarakhand , பிரதமர் நரேந்திர மோடி
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...