காஞ்சி மருத்துவத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனராக இருப்பவர் டாக்டர் பழனி. இவரது அலுவலகம் காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ளது. இவர் மீது தனியார் கல்லூரிகளுக்கு தூய்மைப் பணி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 6 லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பழனியின் அலுவலகத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2,02,300 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தது. பழனி அலுவலகத்தில் நடந்த சோதனைக்கும், விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனைக்கும் தொடர்பு உள்ளதா என சொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Related Stories:

More
>