தக்கலை அருகே ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி: மேலும் 5 பேர் படுகாயம்

தக்கலை: தக்கலை அருகே தனியார் ரப்பர் ஆலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழந்தார்.  குமரி  மாவட்டம் தக்கலை அருகே செம்பொன்விலையில் தனியார் ரப்பர் பால்  சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி  பீகார், உ.பி., ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த  தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். நேற்று அதிகாலை 1.30 மணியளவில்,  சுத்திகரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது  திடீரென ரப்பர் பால், சுத்திகரிப்பு பாய்லர் ஒன்று திடீரென வெடித்தது.  அதன் அருகில் நின்றிருந்த பீகாரை சேர்ந்த தொழிலாளி பாலி மகட்டோ (29) தூக்கி வீசப்பட்டு  உயிரிழந்தார். அருகில் இருந்த தக்கலை செம்பருத்திவிளையை சேர்ந்த மரியஜாண் (36), பத்மநாபபுரம்  கிருஷ்ணன் (61), பீகாரை சேர்ந்த அந்தர் மாத்தூர்  (26), பிரதீப் ேஜாணி (24), சோட்டாலால் (25) ஆகிய 5 பேர் படுகாயம்  அடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாய்லர்  வெடித்ததற்கு  தொழில்நுட்ப  கோளாறு காரணமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி விசாரணை  நடந்து வருகிறது.

Related Stories:

More