வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர்:  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று கடந்த மே 28ல் தமிழக அரசு பரோல் வழங்கியது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த பேரறிவாளனை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் நேற்று காலை 10 மணியளவில் அழைத்து வந்தனர். அங்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 3 மணி நேரம் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories:

More
>