அதிமுக முதுகில் சவாரி செய்து தமிழகத்தை கைப்பற்றும் பாஜ முயற்சி பலிக்காது: திருமாவளவன் தாக்கு

திண்டுக்கல்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் தமிழர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு- உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி ஆகியோர் கலந்து கொண்டு  சமூகநீதி - சமூகங்களின் ஒற்றுமை குறித்து பேசினர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைமை வகித்து பேசுகையில், ‘‘சிறுபான்மையினர் மற்றும் பிற பிரிவினர் இடையே பிளவை ஏற்படுத்தி தமிழகத்தை கூறுபோட பாஜ அரசு முயல்கிறது.

அடங்கி கிடந்தவர்களை எளிதாக அடக்கி விடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் யாராலும் அடக்கி விடமுடியாது. தனது விவேகத்தால் உயர்ந்த இடத்துக்கு சென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கர் காட்டிய வழியில் தமிழர்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறோம்.  அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்து தமிழகத்தை கைப்பற்ற பாஜ முயன்று வருகிறது. அது என்றும் நடக்காது’’ என்று பேசினார்.

Related Stories:

More
>