×

போயிங் நிறுவனத்தின் 11வது பி-8ஐ போர் விமானம் கடற்படையிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கக்கூடிய மேலும் ஒரு பி-8ஐ ரக போர் விமானம் இந்திய கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம், நீர் மூழ்கி கப்பல்களை தகர்க்கக்கூடிய பி-8ஐ ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து இத்தகைய 8 விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2009ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.

அதன் பின்னர், 2016ம் ஆண்டு மேலும் 4 பி-8ஐ போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. இவற்றில் 9 விமானங்கள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட நிலையில், 10வது விமானம் கடந்த ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், 11வது பி-8ஐ ரக போர் விமானத்தை போயிங் நிறுவனம் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. .

Tags : Boeing ,Navy , P-8I fighter aircraft, handover
× RELATED போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது...