புரட்சி பாரதம் கட்சியில் 50 பேர் இணைந்தனர்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றிய தேமுதிக செயலாளர் ஜமீன் பி.மகேந்திரன், ஜமீன் பாண்டியன், பாளையம் ஆகியோர் தலைமையில் 50 பேர் தேமுதிகவிலிருந்து விலகி புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்திக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்து புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் கூடப்பக்கம் இ.குட்டி, மாநில செய்தி தொடர்பு துணை செயலாளர் திருமங்கலம் எம்.பி.வேதா, ஒன்றிய தலைவர் ஏ.கே.சிவராமன், செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் வடிவேல், ராக்கெட் ரமேஷ், உதயா, ஜெயராஜ், பாஸ்கர், தேவேந்திரன், அருள், சுதாகர், ரஜினி, பிரேம், புதுச்சத்திரம் மனோஜ், ஹரி, புதியவன், வினோத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: