×

வெள்ளத்தில் நடந்து செல்ல முடியவில்லை: அண்டாவில் சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி: கேரளாவில் ருசிகரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆலப்புழா  அருகே சகழி பகுதியை சேர்ந்தவர்  ஆகாஷ். இவருக்கும் அருகில் உள்ள அம்பலபுழா  பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் நேற்று தலவடியில் உள்ள பனயன்னூர் காவு கோயிலில் திருமணம்  நடத்த முடிவு  செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக  இப்பகுதியில் கனமழை  பெய்ததால் கோயிலை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது.  கோயில் அருகே 4  அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்  குறிப்பிட்ட  நேரத்தில் மணமக்களால் திருமணத்திற்கு செல்லமுடியாத நிலை  ஏற்பட்டது.  ஆனால் நிச்சயித்தபடி அந்த கோயிலில் தான் திருமணம்  செய்ய வேண்டும் என்று மணமக்கள் உறுதியாக இருந்தனர். இதுகுறித்து கோயில்  நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மணமக்களை  தண்ணீரில் இறக்காமல் கோயிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி  கோயிலில்  இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மணமக்கள் காரில் வந்து  இறங்கினர். அங்கிருந்து அண்டாவில் மணமக்களை அமரவைத்து கோயிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து மணமகன் ஆகாஷ் மணமகள்  ஐர்வர்யாவுக்கு  தாலிகட்டினார். பின்னர் அதே அண்டாவில் அமர வைத்து மணமக்கள் காருக்கு அருகில் இறக்கி விடப்பட்டனர். அதன்பின் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Tags : Anda ,Kerala , Marriage, Kerala
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்