×

கொச்சியில் 5.5 கோடி போதை பொருள் கடத்தல்: வெளிநாட்டை சேர்ந்த 2 இளம்பெண்கள் கைது

திருவனந்தபுரம்: கொச்சியில் 5.5 கோடி போதை பொருள் கடத்திய சம்பவத்தில் வெளிநாட்டை சேர்ந்த 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். கேரள  மாநிலம், கொச்சி விமான நிலையம் வழியாக பல்ேவறு நாடுகளில் இருந்தும்  சமீபகாலமாக பெருமளவு போதை பொருள் கடத்தப்படுகிறது. இதையடுத்து கொச்சி விமான  நிலையத்தில் பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த 2 தினங்களுக்கு முன் தோகாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் கொச்சி  வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை  நடத்தினர். அப்போது ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த கானே சிம்பே(21) என்ற  இளம்பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம்  நடத்திய விசாரணையில், கொச்சியில் வியாபாரத்திற்கு ஜவுளி பொருள் வாங்க  வந்திருப்பதாக கூறினார். அவரது பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள் அவரது கைப்பையை சோதனையிட்டனர். அதில் ரூ.5.5 கோடி மதிப்பிலான கொகைன் போதை பொருள்  மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

தொடர்  விசாரணையில், இவர் வெளிநாட்டில் இருந்து கொச்சிக்கு போதை பொருளை கடத்தும்  கும்பலை சேர்ந்தவர் என்பதும்,  இவரிடம் இருந்து சரக்குகளை வாங்குவதற்காக  கொச்சி ஓட்டலில் அதே நாட்ைட சேர்ந்த ஜூலிட்(32) தங்கியிருப்பதும்  தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஜூலிட்டையும் கைது செய்தனர்.  இவரிடம் நடத்தி விசாரணையில், கடந்த 9 மாதங்களாக ெகாச்சியில்  தங்கியிருப்பதும், இவர்தான் போதை பொருள் கடத்தலில் முக்கிய புள்ளி  என்பதும், இளம்பெண்களை பயன்படுத்தி போதை பொருள் பல மாதங்களாக கொச்சிக்கு  கடந்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. விசாரணைக்குபின் இருவரையும்  அதிகாரிகள் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : Kochi , Cochin, drug, kidnapping 2 teenagers, arrested
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...