பயிற்சி ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா பாகிஸ்தான் வெற்றி: நடப்பு சாம்பியன் வெ.இண்டீஸ் அதிர்ச்சி

துபாய்: டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று ஆக.23ம் தேதி தொடங்கும் நிலையில், இந்த சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள 8 அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று  நடந்தன. முதல் ஆட்டத்தில்  வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த வெ.இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. ஹெட்மயர் 28, பொல்லார்டு 23, கேல் 20 ரன் எடுத்தனர். பாக் தரப்பில் ஹசன் அலி,  ஹரிஸ் ராவுப், ஷாகீன் ஷா தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய பாக்.  18 ஓவரில் 3 விக்கெட்  இழப்புக்கு 131 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின்  கேப்டன் பாபர் ஆஸம் 50 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்),   பஹர் ஜமான் ஆட்டமிழக்காமல் 46* ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வழி வகுத்தனர்.  வெ.இண்டீஸ் தரப்பில் ஹேடன் வால்ஷ் 2 விக்கெட் எடுத்தார்.

தென் ஆப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் அபுதாபியில் நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த தெ.ஆப்ரிக்கா 20 ஓவரில்  5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் சேர்த்தது. மார்க்ரம் 48 ரன் (35 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பவுமா 31 ரன், வாண்டெர் டுஸன் 21, மில்லர் 20* ரன் எடுத்தனர். ஆப்கான்  தரப்பில்  முஜிப் 3 விக்கெட் எடுத்தார். அடுத்து களமிறங்கிய  ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 104 ரன் மட்டுமே எடுத்தது. தெ.ஆப்ரிக்கா 41 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆப்கான் கேப்டன் முகமது நபி  அதிகபட்சமாக  34* ரன் எடுத்தார். தெ.ஆப்ரிக்கா தரப்பில் ஷம்சி 3, என்ஜிடி 2 விக்கெட் எடுத்தனர்.

Related Stories:

More