
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் தீபாவளியை முன்னிட்டு விழாக்கால சிறப்பு சலுகையாக கடந்த 14ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதிவரை தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஜோஸ் ஆலுக்காஸ் காஞ்சிபுரம் கிளை மேலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை மேலாளர் பிரவீன் வரவேற்றார். கடந்த 14ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதிவரை சிறப்பு விற்பனை காலங்களில் தங்க நகை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வைர நகைகளுக்கு 25 சதவீத தள்ளுபடி, பிளாட்டினம் நகைகள் 7 சதவீதம் தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. விழாவில் அலுவலக மேலாளர் ஹரி நாராயணன், காஞ்சிபுரம் நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.