செங்கை, காஞ்சி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டஙகளில் உள்ள நீதிமன்றங்களில், அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்: செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்ற குற்றவியல் அரசு  வழக்கறிஞர் திருமுருகன், செங்கல்பட்டு நீதிமன்ற கூடுதல் மாவட்ட அரசு வழக்கறிஞராக வையாபுரி, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நீதிமன்ற குற்றவியல் அரசு சிறப்பு வழக்கறிஞராக சசிரேகா, செங்கல்பட்டு நீதிமன்ற மாவட்ட அரசு வழக்கறிஞராக மகேஷ்குமார், செங்கல்பட்டு நீதிமன்ற மாவட்ட முன்சீப் அரசு வழக்கறிஞராக ஜாகிர்உசேன்.

செங்கல்பட்டு சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பாலாஜி, மதுராந்தகம் மாவட்ட முன்சீப் அரசு வழக்கறிஞராக ரங்கநாதன், தாம்பரம் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக நெப்போலியன்,  தாம்பரம் நீதிமன்ற மாவட்ட முன்சீப் அரசு வழக்கறிஞராக குமரேசன், ஆலந்தூர் நீதிமன்ற சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக கேசவன், ஆலந்தூர் நீதிமன்ற மாவட்ட முன்சீப் அரசு வழக்கறிஞராக சம்பத்குமார், திருக்கழுக்குன்றம் நீதிமன்ற மாவட்ட முன்சீப், அரசு வழக்கறிஞராக சதிஷ்பாபு, செய்யூர் நீதிமன்ற மாவட்ட முன்சீப் அரசு வழக்கறிஞராக சந்தோஷ்குமார்,  செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞராக தம்பிரான், செங்கல்பட்டு நீதிமன்ற மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக ராஜராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: