தலைமை ஆசிரியர் நினைவுநாள்: பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்

மதுராந்தகம்: மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியரின் நினைவுநாளையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மதுராந்தகம் நகரில் கடந்த 138 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க இந்து மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின், முன்னாள் தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்ற சுப்பிரமண்யாவின் முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி குழு தலைவர் ராம் சுப்பிரமண்யா தலைமை தாங்கினார். துணை தலைவர் அனுராதா ராம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் டி.பி.வெங்கடபெருமாள் வரவேற்றார்.

நிகழ்ச்சில், முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமண்யா உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, நினைவு மலரை பள்ளி குழு உறுப்பினர் எஸ்.தேவநாதன் வெளியிட எஸ்.சுகுமார் பெற்று கொண்டார். பள்ளி செயலாளர் எம்.சுப்பிரமணியன், முன்னாள் தலைமை ஆசிரியர் ஓ.ஆர்.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமண்யா நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் ரவிசங்கர் செய்தார்‌. முடிவில், அனைவருக்கும் விழா மலர் புத்தகம் வழங்கப்பட்டது.

Related Stories:

More
>