×

மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

காஞ்சிபுரம்: இன்று மிலாது நபியை முன்னிட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர்கள் காஞ்சிபுரம் ஆர்த்தி, செங்கல்பட்டு ராகுல்நாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை. இன்று மிலாது நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அதனுடன் இணைந்த  பார்கள், அயல்நாட்டு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Tasmag ,Prophet ,Milad , Milad Nabi, Tasmag, Holiday
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...