×

அரசு ஐடிஐயில் படிப்பு முடித்ததும் வேலை வாய்ப்பு: அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன்திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசு ஐடிஐயில் படிப்பு முடித்ததும், வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார். செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன்திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு படிக்கும் மாணவர்களுடன் நேற்று    கலந்துரையாடினார். பின்னர், அங்கு என்னென்ன தொழில்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரசின் சலுகைகள் முறையாக கிடைக்கிறதா, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதா என அதிகாரிகளிடம் ேகட்டறிந்தார். மேலும்,  படிப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக உறுதி செய்தார். நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு நவீன பயிற்ச்சி கருவிகள் வழங்குவதாகவும் மாணவர்களிடம் தெரிவித்தார்.

அவருடன் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர்  கே.வீராராகவ ராவ், கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத், அரசு தொழிற்பயிற்சி  நிலைய துணை இயக்குநர் விஜயமாலா ஆகியோர் இருந்தனர். பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழில்பூங்கா அமைந்துள்ளது. தற்போது ஒரகடம் பகுதியில், புதிதாக தொழிற்பயிற்சி மையம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது. இதைதொடர்ந்து, பெரும்புதூர் அருகே, ஒரகடத்தில், கடந்த 2014ம் ஆண்டு 1.80 கோடியில் கட்டபட்ட திறன் மேம்பாட்டு மையம் செயல்படாமல் உள்ளது. இதனால், அந்த கட்டிடம் எதற்கும் பயன்படாமல் பாழானது. இதையடுத்து திறன் மேம்பாட்டு மைய கட்டிடம், அரசு தொழில் பயிற்சி நிலையமாக மாற்றபட்டது.

மேலும், கம்பியர் மோட்டார் வாகனம், கம்பியர் மின்னணுவியல், இயந்திரம் மற்றும் மிண்ணனுவியல் தொழில்நுட்பவியலாளர், வெல்டர், குளிர்பதனம் பராமரிப்பு, தொழில்நுட்ப உதவியாளர் என, 2 ஆண்டு பயிற்சி, வெல்டர் ஓராண்டு பயிற்சி என 5 தொழிற்பிரிவுகள், ஒரகடம் தொழில் நிலையத்தில் துவங்கப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்கையும் நடந்து முடிந்து, மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், ஒரகடம் தொழில் பயிற்சி மையத்தில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. அவருடன் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட கவுன்சிலர் படப்பை மனோகரன் ஆகியோர் இருந்தனர்.

Tags : Minister ,CV Ganesan , Government ITI, Employment, Minister CV Ganesan
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...