5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை: உள்துறை செயலாளர் பிரபாகர் நேற்று பிறப்பித்த உத்தரவு: சென்னை போலீஸ் கமிஷனர் கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி கழக மேலாண் இயக்குநர்  கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், சிவில் சப்ளை சிஐடி கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார், தமிழக கேடர் டெல்லி உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி ரவிச்சந்திரன், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் உறுப்பினர் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் ஆகியோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.  

சென்னை தலைமையிட கூடுதல் டிஜிபியாக உள்ள சங்கர், சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், சைபர் குற்றத்தடுப்பு பிரிவு வெங்கட்ராமன் சென்னை தலைமையிட கூடுதல் டிஜிபியாகவும், சென்னை தொழில்நுட்ப சேவை பிரிவு கூடுதல் டிஜிபி அம்ரேஷ் பூஜாரி சென்னை சைபர் க்ரைம் குற்றத்தடுப்பு பிரிவுக்கும், மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக உள்ள வினித் தேவ் வாங்க்டே கூடுதல் பொறுப்பாக சென்னை, தொழில் நுட்ப சேவை பிரிவை கவனிப்பார். சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள மகேஷ்குமார் அகர்வால் கூடுதல் பொறுப்பாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை கவனிப்பார். சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு ஐஜியாக உள்ள கபில் குமார் சரத்கர், சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>