கேரளாவில் கனமழை தொடர்வதால் ஐப்பசி மாதம் முழுவதும் சபரிமலை செல்ல அனுமதி ரத்து: தேவசம்போர்டு

பத்தினம்திட்டா: கேரள மாநிலம் பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதனால் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை சென்றுள்ள பக்தர்கள் எரிமேலி, நிலக்கல் ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருந்தது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் எரிமேலி மற்றும் நிலக்கல் பகுதிகளில் காத்திருந்தனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் முழுவதும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தற்போது தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Related Stories:

More
>