கிழிந்த கொடியை ஏற்றிய திண்டுக்கல் அதிமுகவினர்: பொன்விழா கொண்டாட்டத்தில் தொண்டர்கள் வேதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் அதிமுக பொன்விழாவில் கிழிந்த நிலையில் இருந்த கட்சி கொடியை ஏற்றியதால், தொண்டர்கள் கவலையடைந்தனர். அதிமுக பொன்விழாவை முன்னிட்டு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடினர். பின்னர், அதிமுக கொடி ஏற்றப்பட்டது. அப்போது, ஓங்கி இழுத்ததில் கொடி கிழிந்து தொங்கியது. கிழிந்து தொங்கிய கொடியை ஏற்றியதால் அதிமுக தொண்டர்கள் கவலையடைந்தனர்.

இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், ‘‘முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கட்சியை தொடங்கினார் என்று எங்களுக்குத்தான் தெரியும். கட்சியில் பதவி சுகங்களை அனுபவித்தவர்கள், புதிய கட்சி கொடியை ஏற்றாமல், கிழிந்த கொடியை ஏற்றி விட்டு ெசல்கின்றனர். ஏற்கனவே கட்சியில் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் புயல் வீசிக் கொண்டிருக்கும் போது, பறக்கும் கொடியும் கிழிந்து வீசுவது எங்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

தனி ஆளாக முன்னாள் எம்பி

முன்னாள் எம்பி உதயகுமார், தனி ஆளாக வந்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்கிருந்தவர்களை எல்லாம் அழைத்து தன்னுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

Related Stories:

More
>