திண்டுக்கல்லில் ஐவர் கால்பந்து போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாநில அளவிலான 2 நாள் ஐவர் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், கரூர் உட்பட 21 அணிகள் பங்கேற்கின்றன. அனைத்துப் போட்டிகளும் நாக் அவுட் முறையில் நடக்கிறது. போட்டியை எஸ்விஆர் டிரஸ்ட் தலைவர் வெற்றிவேல், செயலாளர் பழனிச்சாமி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக இணைச்செயலாளர் தங்கதுரை, பெண்கள் அணியின் கன்வீனர் ஈசாக், ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த போட்டி இன்றும் நடக்கிறது. முதல் பரிசு பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 7 ஆயிரத்து 500ம், மூன்றாம் பரிசாக 5,000ம் வழங்கப்பட உள்ளது. மழை பெய்தாலும் போட்டி தடைபடாமல் நடத்தப்படும் என போட்டியை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>