×

வாளையார் வனப்பகுதியில் 13 ஆயிரம் கஞ்சா செடிகள் அழிப்பு

பாலக்காடு: கேரள-தமிழக எல்லை வாளையார் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக வாளையார் வனத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்தறை காவலர்கள் இணைந்து கடந்த 3 நாட்களாக வாளையார், வடசேரி, மலையடிவாரம் பகுதியில் கஞ்சா வேட்டையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு 2 ஏக்கர் நிலப்பரப்பில் மர்ம கும்பல் 13 ஆயிரம் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது தெரியவந்தது. மேலும் பல்வேறு இடங்களில் பயிரிடுவதற்கு கஞ்சா செடிநாற்றுகள் தயார்படுத்தியுள்ளனர்.

இவற்றை வனத்துறை காவலர்கள் வெட்டி தீயிட்டு அழித்தனர்.  கஞ்சா கும்பலை குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். வாளையார், மலம்புழா, கஞ்சிக்கோடு, வட்டப்பாறை ஆகிய இடங்களின் மலையடிவாரத்தில் கஞ்சா பயிரிடப்படுவது குறித்து வனத்துறை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலையும் தேடிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Walayar forest , Destruction of 13 thousand cannabis plants in Walayar forest
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி