தென் மண்டல சிலம்ப போட்டி: மாணவர்கள் அசத்தல்

மதுரை: தென் மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டி மதுரையில் நடந்தது. உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் தென் மண்டல அளவிலான சிலம்பாட்டப்போட்டி மதுரை டிவிஎஸ் நகரில் நடந்தது. இதில் 8 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 6 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் சுமார் 650 பேர் கலந்துகொண்டனர். இந்த போட்டிகள் தனிச்சிறப்பு பிரிவில் ஒற்றைச் சிலம்பு, இரட்டை சிலம்பு, போரிடும் முறை உள்ளிட்ட போட்டிகளும் மற்றும் அலங்காரச் சிலம்பம் ஆகிய போட்டிகளும் நடந்தன.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிறுவனத் தலைவர் சுதாகரன் சான்றிதழ் வழங்கினார். துணைத் தலைவர் கார்த்திக், தேசிய அமைப்பு செயலாளர் ராஜ், மாநில துணை அமைப்பு செயலாளர்கள் அப்துல், ரபீக் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

More
>