மன்னார்குடி பெங்களூர் இடையே புதிய விரைவு ரயில் சேவை துவக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் டிஆர் பாலு கோரிக்கை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ரயில் நிலையம் பொது மக்க ளின் 40 ஆண்டு கால போரா ட்டங்களுக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய ரயில்வே நிலைக் குழு தலைவராக இருந்த திமுகவை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு எடுத்த பெரும் முயற்சியால் கொண்டு வரப் பட்டது. மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பதி, ஜெய்பூர், மானாமதுரை, மயிலாடு துறை போன்ற முக்கிய நகரங்களுக்கு 6 க்கும் மேற்ப்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் இந்த ரயில் சேவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். சிறுகுறு வியாபாரி கள், கர்நாடகா வாழ் தமிழர்களின் உறவினர்கள் என பலதரப்பட்ட மக்கள் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில் இருந்தும், திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பெங்களூரு சென்று வருகின்றனர். இவர்கள் சென்று வர மயிலாடுதுறையில் இருந்து (வ.எண் 16231) கும்ப கோ ணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக மைசூர் வரை செல்லும் ஒரே ஒருவிரைவு ரயில் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.

இந்த ரயிலை தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் நம்பி உள்ளனர். மைசூர் விரைவு ரயிலை தவிர இரண்டு வாராந்திர ரயில்கள் மட்டுமே பெங் களூரு வழியாக செல்கிறது. திருச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை தோ றும் கங்காநகர் வரை செல்லும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் மட் டுமே கொண்ட ஹம்சாபர் ரயில் (வ. எண் 22498), செவ்வாய் கிழமை தோ றும் இரவிலும் ஒடும் வேளாங்கண்ணியில் புறப்பட்டு கோவா வரை செல் லும் வாஸ்கோ விரைவு ரயில் (வ.எண் 17316) . இந்த ரயில்கள் பனாசாவாடி வழியாக தான் செல்லும்.

ஆனால் பெங்களுருவில் உள்ள பிரதான கேஎஸ் ஆர் சந்திப்பு செல்லாது. எனவே, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளின் நலன் கருதி மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர தினசரி பயணிகள் ரயிலை இயக்க நடவடிக் கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், ரயில் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க தலைவர் ஹரேஷ் கூறு கையில், , ரயில்வே நிலைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் எம்பிக்கள் கனி மொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன்,

வேலு ச்சாமி, சண்முகசுந்தரம், செந்தில்குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமசை அண்மையில் சந்தித்து பல்வேறு ரயில்வே பணிகள் தொடர்பான கோரிக்கை களை விடுத்தனர். அதில், மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு ரயில் விட வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.இந்த சந்திப்பின் மூலம் மன்னார்குடி பெங்களூரு இடையே ரயில் சேவை விரைவில் துவங்க வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இது பொது மக்கள், ரயில் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

Related Stories:

More