கரூர் வடக்கு சாமிநாதபுரத்தில் குழாய் உடைப்பால் சாலையில் வீணாக ஓடும் குடிநீர்

கரூர்: கரூர் நகராட்சி வடக்கு சாமிநாதபுரத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் தண்ணீர் வீணாக செல்வதை நகராட்சி விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சி பகுதிக்குள் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பருவமழை போதிய அளவு பெய்து வருவதால் குடிநீருக்கு எந்த கட்டுப்பாடுமின்றி நகராட்சி சார்பில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இருப்பினும் கரூர் நகராட்சி வடக்கு சாமிநாதபுரத்தில் பொதுமக்களுக்கு இணைப்பு வழங்கும் குடிநீர் குழாயில் நீண்ட காலமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் நகராட்சி சார்பில் இதுவரை குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாத காரணத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடி தண்ணீர் வீணாக செல்கிறது.

எனவே நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி வீணாக செல்லும் குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>