×

தொன்மையான மீனாட்சி அம்மன் சிலை ரூ.1 கோடிக்கு விற்க முயன்ற 7 பேர் கொண்ட கும்பல் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை:  பல கோடி மதிப்புள்ள மீனாட்சி அம்மன் சிலையை கடத்தல் கும்பல் ஒன்று ரூ.1 கோடிக்கு விலை பேசி விற்க முயற்சிப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேல்மருவத்தூர், சித்தாமூர் அருகே தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கார்த்திக், மூர்த்தி, சுந்தரமூர்த்தி, குமரன், அசோக், அறிவரசு, அப்துல் ரகுமான் ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. இதை பார்த்த சிலை கடத்தல் பிரிவு போலீசார், அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்களிடம் பழமை வாய்ந்த  மீனாட்சி அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த சிலையை சர்வதேச கும்பல் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு பேரம் பேசி விற்க முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Meenakshi , Meenakshi goddess, idol, gang, arrest, police
× RELATED மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம்...