×

சதுரகிரி மலைக்ேகாயில் செல்ல 4 நாள் அனுமதி

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதம் 8 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியையொட்டி இன்று முதல் 4 நாட்கள் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.  காலை 7 முதல் 10 மணி வரை மட்டுமே கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இரவில் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.

Tags : Sathuragiri hill station , Sathuragiri, hill temple, permission
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...