விஷம் குடித்து எஸ்.எஸ்.ஐ. தற்கொலை

வீரவநல்லூர்: வீரவநல்லூரை அடுத்த காருகுறிச்சியில் விஷம் குடித்து எஸ்.எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த வடக்கு காருகுறிச்சி, பாறையடி தெருவைச் சேர்ந்தவர் சிவன் மகன் இசக்கிமுத்து (52), நெல்லை மாநகர பிரிவில் எஸ்.எஸ்.ஐ ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும் மருதுபாண்டி என்ற மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர். நெல்லை டவுன் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த இசக்கிமுத்து, நேற்று காலை சொந்த ஊரான வடக்கு காருகுறிச்சிக்கு வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக  மன உளைச்சலில் இருந்த இசக்கிமுத்து வீட்டின் பின்புறம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் மயக்கமடைந்த இசக்கிமுத்துவை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இசக்கிமுத்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>