காஜியாபாத்தில் நள்ளிரவில் பயங்கரம் 25வது மாடியிலிருந்து விழுந்து இரட்டை சகோதரர்கள் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்

நொய்டா: உபி மாநிலம் காஜியாபாத்தில் உள்ள சித்தார்த் விகாரில், பிரதீக் கிராண்ட் சொசைட்டி என்கிற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள் முதல் பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடுக்குமாடியில் குடியிருக்கும் ஓரு குடும்பத்தை சேர்ந்த 14 வயதுடைய இரட்டையர்கள் நேற்று மன்தினம் நள்ளிரவில் 25வது தளத்தில் உள்ள வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சொசைட்டி பாதுகாவலர் உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர்களை பரிசோதித்த டாக்டர், சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்து வந்த விஜய் நகர் காவல் நிலைய போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது: உயிரிழந்த சிறுவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர். 9ம் வகுப்பு படித்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற போது, வீட்டில் சிறுவர்களின் தாய், மற்றும் சகேதாரி இருந்துள்ளனர். தந்தை அலுவலக வேலை காரணமாக மும்பைக்கு சென்றுள்ளார்.  உயிரிழப்புக்கான காரணம் விசாரித்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்  என்று கூறப்படுகிறது.

Related Stories: