×

கொரோனா தடுப்பு குழு தலைவர் தகவல் சிறுவர்களுக்கு தடுப்பூசி விரைவில் இறுதி முடிவு

புதுடெல்லி: ‘ஒட்டு மொத்த அறிவியல் பகுப்பாய்வு, தடுப்பூசி கிடைக்கும் சூழல் அடிப்படையில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து ஒன்றிய அரசு இறுதி முடிவு எடுக்கும்,’ என்று கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் விகே.பால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே 2 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு உட்பட் சிறுவர்களுக்கு தடுப்பூசி  செலுத்துவது குறித்து பல்வேறு மருந்து நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் விகே.பால் நேற்று கூறுகையில், ‘‘பல்வேறு நாடுகள் கொரோனாவின் 2 அலைகளை கடந்து விட்டன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், 2வது அலையின் வீரியம் குறைந்து விட்டதாக கருத முடியாது. பல்வேறு நாடுகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளன. ஒட்டு மொத்த அறிவியல் பகுப்பாய்வு, சிறுவர்களுக்கான தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கான சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம் எப்போது தொடங்கும் என்பது பற்றி திட்டவட்டமான காலக்கெடுவை தற்போது கூறுவது இயலாது,’’ என்றார்.  

ஜைடஸ் காடில்லாவுக்கு ஒப்புதல்
ஜைடஸ் காடில்லா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஊசி அல்லாத கொரோனா தடுப்பு மருந்தாகும். இது நாட்டில் முதன் முதலாக 12 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு போடப்பட உள்ளது. இதன்  அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona Prevention , Corona, vaccine, head, vaccine for boys,
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்...