புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி அன்று சூரிய கதிர்கள் விழும் வகையில் கருவறை வடிவமைக்கப்பட இருப்பதாக ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்தார். இது குறித்து அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறுகையில், ‘‘ஒடிசாவில் 13வது நூற்றாண்டை சேர்ந்த கோனார்க் கோயிலில் சூரிய கதிர்கள் கருவறையில் விழுவது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ஒவ்வொரு ஸ்ரீராமநவமி தினத்திலும் அயோத்தி ராமர் கோயிலில் சூரிய கதிர்கள் விழும் வகையில் கருவறை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஞ்ஞானிகள், வானியியல் வல்லுனர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து வருகிறோம்.