×

மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது என்பதற்காக தனது கடமையில் இருந்து தந்தை ஒதுங்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ‘மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது என்பதற்காக, தந்தை தனது கடமையில் இருந்து தப்பிக்க முடியாது,’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ெடல்லி நகராட்சியில் உயர்பிரிவு கிளர்க்காக வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு, 1997ம் ஆண்டு திருமணமானது. இவருக்கு ஒரு மகள், மகன் முறையே 20 மற்றும் 18 வயதில் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்பெண் 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அப்போது, குடும்ப நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதம் ரூ.15 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்,’ என்று அப்பெண்ணின் கணவருக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை கணவர் மேல்முறையீடு செய்தார். ‘மகள் மட்டுமின்றி, எனது மகனுக்கும் 18 வயதுக்கு மேலாகி விட்டதால், இதற்கு மேல் ஜீவனாம்சம் வழங்க முடியாது,’ என்று தனது மனுவில் அவர் கூறினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது என்பதால் தந்தை தனது கடமையில் இருந்து ஒதுங்க முடியாது. மகனின் படிப்பு செலவை ஏற்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

அவன் இன்னும் சுயமாக சம்பாதிக்கும் நிலைக்கு வரவில்லை. இந்த குடும்ப சுமை முழுவதும் பெண் ஒருவரே எப்படி ஏற்க முடியும்? எனவே, மகனுக்கு 18 வயது நிரம்பிவிட்டதால் இனி தனது கடமை முடிந்து விட்டது என்று சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு ஏற்க முடியாது,’ என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags : Son, duty, father, Delhi High Court
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...