பிஎன்பி பாரிபா ஓபன் ஆண்கள் ஒற்றையர் பைனலில் கேமரான் - நிகோலஸ் பலப்பரீட்சை

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் கேமரான் நாரியுடன் ஜார்ஜியா வீரர் நிகோலஸ் பாசிலாஷ்விலி மோதுகிறார். முதல் அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் (23 வயது, 39வது ரேங்க்) மோதிய நிகோலஸ் பாசிலாஷ்விலி (29 வயது, 36வது ரேங்க்) 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2வது அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை (30 வயது, 28வது ரேங்க்) எதிர்கொண்ட கேமரான் நாரி (26 வயது, 26வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் நிகோலஸ் - கேமரான் மோதுகின்றனர். இருவருமே மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து ஏடிபி தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறி உள்ளதால், புதிய சாம்பியன் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சீசனின் தொடக்கத்தில் 71வது ரேங்க் வீரராக இருந்த கேமரான், 6 ஏடிபி தொடர்களில் இறுதிப் போட்டி வரை முன்னேறியதால் தற்போது 26வது இடத்துக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: