படேல் சிலையை நவ. 1 வரை பார்க்க முடியாது

அகமதாபாத்: குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் நினைவாக, 182 மீட்டர் உயரம் கொண்ட அவருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  வரும் 31ம் தேதி படேலின் 146வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இச்சிலையை பார்த்து ரசிப்பதற்கு வரும் 28 முதல் நவம்பர் 1ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

படேலின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடி படேலின் சிலைக்கு மரியாதை செலுத்த குஜராத் செல்ல இருப்பதாக கூறப்பட்டது. இந்த தடையின் மூலம் அவருடைய பயணம் ரத்து செய்யப்படுமா என்பது கூறப்படவில்லை.

Related Stories:

More