காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு: காஞ்சிபுரம் கோ-ஆப்டெக்ஸில் பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உத்திகளை கையாண்டு அரிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ண கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி ரக சேலைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பருத்தி  ரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச் சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற  ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகிறது.

 இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லினன் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள் டிசைனர் கலக்ஸ்ஷன் போர்வைகள், காம்பிரே போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியவை விற்பனைக்கு உள்ளன. கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின்கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7.67 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2021 பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 20.00 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு 1.00 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கு ரூ.1.80 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனையங்களிலும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடன் கோலாகலமாக துவங்குகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள் மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்ளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியை இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். இந்த அரசு தள்ளுபடி வருகிற 31-01-2022 வரை மட்டுமே. எனவே, அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்த தீபாவளி 2021 விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனையினை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இவ்விழாவில், முதுநிலை மண்டல மேளாலர்கள் இசக்கிமுத்து, நந்தகோபால், விற்பனை மேலாளர்,  தணிகைவேலு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Stories:

More