×

ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்கள் ஐஐடியில் சேர்ந்து சாதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் 2020-2021ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் யஸ்வந்த் கணபதி, விஷ்ணு ஆகியோர் ஐஐடியில் சேர தகுதி பெற்றுள்ளனர். திருவள்ளூரில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக, ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற தொழிற்கல்வி கல்லூரிகளான என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி போன்ற கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து சாதனைபடைத்து வருகின்றனர். இதுவரையில் ஐஐஐடியில் 2 மாணவர்களும் என்ஐடியில் 8 மாணவர்களும் ஐஐடியில் 2 மாணவர்களும் சேர்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் ஜெஇஇ மெயின் தேர்வில் 17 மாணவர்களும், ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் 2 மாணவர்களும் 2020-2021ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், ஸ்ரீநிகேதன் பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் ஐஐடியில் சேர தகுதி பெற்றது, ஸ்ரீநிகேதன் கல்விக் குழுமத்திற்கு கிடைத்த வெற்றி என பள்ளி தாளாளர் விஷ்ணுசரண் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களை அழைத்து இனிப்பு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது பள்ளி இயக்குனர் பரணிதரன், முதல்வர் ஸ்டெல்லா ஐரின் குமாரி, துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Sreeniketan School ,IIT , Sreenikethan, School Student, IIT, Achievement
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!