×

நமக்கு தேவை ஒற்றுமை தான் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ், எடப்பாடிக்கு சசிகலா அழைப்பு

சென்னை: நான்கரை ஆண்டுபெங்களுரு சிறைவாசத்துக்கு பிறகு, நேற்று முன்தினம் சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் சென்றார். இந்தநிலையில், அதிமுக பொன்விழா ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்  நினைவு இல்லத்துக்கு நேற்று காலை சசிகலா அதிமுக கொடியை ஏற்றினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: என்னை கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். அவர்கள் செய்த தவறை நாம் செய்யக்கூடாது. அதிமுகவின் பொன்விழா ஆண்டு தொடக்க நாளில் எம்.ஜி.ஆரின் தி.நகர் இல்லத்தில் கட்சியின் கொடியை ஏற்றியதற்கும், அதேபோன்று எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் பொன்விழா மலரை வெளியிட்டதற்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று கட்சியின் பொன்விழா ஆண்டு. நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோது கூட அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்துவிட்டுதான் சென்றேன்.

தேர்தலில் நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று உங்களுக்கு தெரியும். என்னால் இந்த இயக்கத்திற்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் அமைதியாக இருந்தேன். அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்த நேரத்தில் நமக்கு தேவை ஒற்றுமை தான். மக்கள் நலனில், தொண்டர் கட்சிக்காக, மக்களுக்காக, தொண்டர்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு கட்சி பிளவுபட்டது. அந்த சமயத்தில் இதே ராமாவரம் தோட்டத்தில் ஜானகி என்னை அழைத்தார். அவருடன் பேசி நல்ல முடிவு ஏற்பட்டது. கட்சி ஒன்று சேர வேண்டும் என அவரே கூறினார். ஜெயலலிதாவின் முயற்சியால் கட்சி ஒன்றுபட்டது. அதுபோலவே நாம் அனைவரும்  ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும்.

* நான்தான் அதிமுக பொதுச்செயலாளர் தி.நகர் கல்வெட்டுல வெட்டி பக்கத்துலயே நின்னார் சசிகலா
அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு நேற்று காலை சசிகலா வந்தார். அதிமுக கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அங்கிருந்த கல்வெட்டின் அருகே போனார். அதைப் பார்த்துக்கொண்டே நின்றார். அந்த கல்வெட்டில், ‘பொன்விழா ஆண்டு துவக்க நாள். கொடியேற்றியவர்: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என்று பொறிக்கப்பட்டிருந்தது. தி.நகர் கல்வெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலாவின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிமுக முன்னணி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags : Sasikala ,Edappadi , All we need is unity and we must all unite: Sasikala calls for OPS, Edappadi
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...