×

போலி சமூக வலைதள கணக்குகளை நம்ப வேண்டாம்: மக்களுக்கு ஆளுநர் மாளிகை கோரிக்கை

சென்னை: ஆளுநர் பெயரில் போலியாக வரும் இ-மெயில், டிவிட்டர் போன்ற சமூக வலைதள கணக்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆளுநர் பெயரில் சில சமூக விரோதிகள், போலியான இ-மெயில் கணக்குகளை உருவாக்கி ஆட்சேபகரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலி கணக்குகளை உருவாக்கிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநர் மாளிகையின், இ-மெயில் முகவரியான govtam@nic.in மற்றும் டிவிட்டர் பக்கமான @rajbhavan_tn ஆகியவையே அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் ஆகும். எனவே, மக்கள் போலி இ-மெயில் மற்றும் டிவிட்டர் கணக்குகளை நம்ப வேண்டாம்.  இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Governor ,House , Do not trust fake social web accounts: Governor's House demand for people
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...