உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக சார்பில் ‘பம்பரம்’ சின்னத்தில் போட்டியிட்டு 2 மாவட்டக் கவுன்சிலர்கள் மற்றும் 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை 8 மணியளவில் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன், துரை வைகோவும் வந்தார். அப்போது வைகோ மற்றும் துரை வைகோவுக்கு மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழககுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கட்சி கொடி ஏந்தியபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தங்களது சான்றிதழை வைகோவிடம் காட்டி வாழ்த்து பெற்றனர். 

Related Stories: