×

சென்னை ஐஐடி வளாகத்தில் நோய் மற்றும் முதுமையால் 56 நாய்கள் இறப்பு: 87 நாய்கள் பராமரிப்பில் உள்ளது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஹரிஷ் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 15ம் தேதி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணிஷ், ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, கால்நடை பாதுகாப்பு அலுவலர்களோடு நேற்று ஐஐடிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.  2020ம் ஆண்டு அக்டோபர் மாதக்கணக்கெடுப்பின்படி 188 நாய்கள் இந்த வளாகத்தில் இருந்துள்ளன. தன்னார்வலர்களால் வளர்த்து பாதுகாக்கிற பணியை ஐஐடி நிர்வாகம் ஏற்று, ஒரு குழு அமைத்து கண்காணித்து வருகிறது. இந்த வளாகத்தில் 10,600 சதுர அடியில் இரண்டு கொட்டகை அமைத்து 9 நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு, செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, அவற்றைப் பராமரிக்கிற பணிகளை செய்கிறது. மேலும் 14 நாய்கள் வெறித்தனம் இல்லாத வகையில் இருந்ததால் அவை வெளியில் விடப்பட்டிருக்கிறது.

கடந்த ஓர் ஆண்டில் 56 நாய்கள் இறந்துள்ளன. வெளியில் இருந்து வளர்ப்பதற்கு கேட்பவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து 2 நாய்கள் தப்பித்து ஓடியுள்ளன. 87 நாய்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. 56 நாய்கள் நோய் காரணமாகவும், முதுமையால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடற்கூராய்வு முடிவு வந்தபிறகு நாய்கள் இறந்ததற்கான உண்மைத்தன்மை தெரியும். இது தொடர்பாக ஐஐடி இயக்குநர், பதிவாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நாள்கள், குட்டி மான்களை வேட்டையாடுகிறது.

அதற்கான புகைப்படம், வீடியோ போன்ற ஆதாரங்களைக் காண்பித்தார்கள். நாங்கள் அவர்களிடம் சொல்லியது, நாயும், மானும் இரண்டுமே உயிர்கள்தான். இரண்டு உயிர்களையும் ஒரே மாதிரி பராமரிக்க சொல்லியிருக்கிறோம். 2018ம் ஆண்டு 92 மான்கள் இறந்திருக்கின்றன. அதில் 55 மான்கள் நாய் கடித்து இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டு 38 மான்களும், 2020ம் ஆண்டு 28 மான்களும், 2021ம் ஆண்டு 3 மான்கள் தான் இறந்துள்ளது. இந்த ஆண்டு தான் குறைந்த எண்ணிக்கையில் மான்கள் இறந்துள்ளன. நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, இங்கு புதியதாக வருகிற நாய்களைப் பற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக நாய்கள் வந்தால் எங்களிடம் சொன்னால் நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் பராமரிப்போம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஐஐடி நிர்வாகமும் உடனடியாக தகவல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Chennai IIT ,Minister ,Ma Subramaniam , 56 dogs die of disease and old age at Chennai IIT campus: 87 dogs in care; Information from Minister Ma Subramaniam
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு