மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வீடு திரும்பினார்

சென்னை: பணியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இவர் விரைவில் பணிக்கு திரும்புவார் என்று காவல் துறையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடந்த வியாழக்கிழமை மதியம் பணியில் இருந்தபோது, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கமிஷனர் சங்கர் ஜிவாலை உடனடியாக, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு, இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஆஞ்சியோ சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. மற்றொரு அடைப்பை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவேல் சிகிச்சை அளித்து சரிசெய்தார். அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் 3 நாள் சிகிச்சை முடிந்து உடல் ஆரோகியத்துடன் நேற்று மாலை வீடு திரும்பினார். அதைதொடர்ந்து அவர் விரைவில் பணியில் ஈடுபடுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

More
>